சீன-ஆர்ஜென்டின உறவு நிதானமாக வளர முயற்சி செய்யும்
2023-11-23 19:45:05

ஆர்ஜென்டினாவின் புதிய அரசுடன் கூட்டாக முயற்சி செய்து பாரம்பரிய நட்புறவைத் தொடர்ந்து, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பை விரிவாக்கி, இருநாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவின் நீண்டகாலமான நிதானமான வளர்ச்சியை முன்னேற்றுவித்து இருநாட்டு மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்று சீனா விரும்புகின்றது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 23ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

நவம்பர் 21ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஹவேல் மிரைவுக்கு வாழ்த்து செய்தியை அனுப்பி, ஆர்ஜென்டினா குடியரசின் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாழ்த்து தெரிவித்தார். அண்மையில் மிரை எக்ஸ் சமூக ஊடகத்தில் ஷியின் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.