உருகுவே அரசுத் தலைவருடன் லீச்சியாங் சந்திப்பு
2023-11-23 19:48:14

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த உருகுவே அரசுத் தலைவர் லகாலேவுடன் நவம்பர் 23ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார்.

லீச்சியாங் கூறுகையில், சீன-உருகுவே தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட கடந்த 35 ஆண்டுகளாக, இரு தரப்புகளும் ஒன்றுக்கொன்று புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஆதரவு அளித்து வருவதுடன், இரு நாட்டுறவு உயர்தர வளர்ச்சியடைந்து வருகிறது. உருகுவேவுடன் இணைந்து, இரு நாட்டுறவு புதிய சாதனைகளைப் பெறுவதை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார்.

மேலும், இரு நாட்டு மைய நலன்களுடன் தொடர்புடைய முக்கிய விவகாரங்களில் சீனாவும் உருகுவேவும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளிக்க வேண்டும். உருகுவேவுடன் இணைந்து, சீன-லத்தின் அமெரிக்க பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றி, பலதரப்புவாதம் மற்றும் திறப்புத் தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தையும், சர்வதேச நேர்மையையும் பேணிக்காக்க சீனா விரும்புகிறது என்றும் லீச்சியாங் தெரிவித்தார்.