பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையில் சீனாவின் திட்டம்
2023-11-23 16:12:07

பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல அப்பாவி மக்களின் உயிரிழப்பு மற்றும் மனித நேய பேரழிவு குறித்த நிலைமை சர்வதேச சமூகத்தில் கவலை ஏற்படுத்தியுள்ளது. 

இத்தகைய பின்னணியில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இந்த மோதலை எதிர்கொள்வது பற்றிய அவசரப் பணிகளை முன்வைத்தார். முதலில், மோதலில் சிக்கியுள்ள தரப்புகள் உடனே போர் நிறுத்தம் செய்து, மனிதநேய உதவிப் பாதையை உத்தரவாதம் செய்து, மோதல் அதிகமாவதை தடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலைத் தீர்ப்பதற்கான அடிப்படை வழி "இரு நாடுகளின் திட்டத்தை" செயல்படுத்துவதாகும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார். இது பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையைப் பயனுள்ள முறையில் தீர்ப்பதற்கான திசையை வழங்கியது. 

ஷிச்சின்பிங் உரை நிகழ்ந்த முந்தைய நாள், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டுக் குழு, சீனாவில் பயணம் மேற்கொண்டது. பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலை எதிர்கொள்ள சர்வதேச இணக்க முயற்சிக்கான முதலாவது நாடாக அவர்கள் சீனாவைத் தேர்ந்தெடுத்தனர். சீனா மீதான உயர் நம்பிக்கையையும், சீனாவின் நீதியான நிலைப்பாட்டை அதிக அளவில் அங்கீகரிப்பதையும் இது பிரதிபலிக்கிறது. இவ்வாண்டின் மே திங்களில் மேற்கொள்ளப்பட்ட பொது மக்கள் கருத்துக் கணிப்பு முடிவின் படி, பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலில்  ஒருங்கிணைப்பாளராக சீனா ஈடுபட 80% பாலஸ்தீன மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையில் இஸ்ரேலை ஆதரிக்கின்ற அமெரிக்காவின் கொள்கையைப் போலன்றி, எந்தவொரு நாட்டுக்கும் ஒரு சார்பான ஆதரவை சீனா பாரபட்சம் காட்டவில்லை. பாலஸ்தீன மக்களின் வாழுவுரிமை, நாட்டைக் கட்டியெழுப்புதல், இஸ்ரேல் மக்களின் உயிர்வாழ்வு மற்றும் பாதுகாப்புத் தேவை ஆகியவற்றில் சீனா கவனம் செலுத்துகிறது. சீனா எப்போதும் நேர்மை மற்றும் நீதியின் பக்கத்தில் நிற்கிறது. 

நவம்பர் முதல் நாள் தொடங்கி, ஐ.நா.பாதுகாப்பு அவையின் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான சீனாவின் முன்னேற்றத்தில், பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையில் 2712ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் நிகழ்ந்த பிறகு, ஐ.நா. பாதுகாப்பு அவையில் தொடர்புடைய தீர்மானம் நிறைவேற்றப்படுவது இதுவே முதன்முறையாகும். கடந்த 7 ஆண்டுகளாக, பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினை குறித்து ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானம் இது ஆகும். ஐ.நா. பாதுகாப்பு அவையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மிகவும் கடினம். இதற்குச் சீனா மாபெரும் முயற்சி மேற்கொண்டு, பெரும் நாடுகளின் பொறுப்பைக் காட்டுகிறது.