ஜி 20 குழு தலைவர்களின் காணொளி உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட லீச்சியாங்
2023-11-23 09:15:57

சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் 22ஆம் நாளிரவு, ஜி 20 குழு தலைவர்களின் காணொளி உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.

தற்போது உலக பொருளாதார மீட்சிப் பாதை பல சிக்கல்களைச் சந்தித்துள்ளது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்யின் கருத்துக்கிணங்க, உலக மற்றும் பிரதேச பெரிய நாடுகளான ஜி 20 நாடுகள், பொறுப்பு ஏற்கவும் தலைமை தாங்கவும் வேண்டும். ஜி 20 நாடுகள் வளர்ச்சியை தலைமையிடத்தில் வைக்க வேண்டும் என்று லீ ச்சியாங் தெரிவித்தார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணிக்கான 3ஆவது சர்வதேச ஒத்துழைப்பு உச்சி கருத்தரங்கையும், 6ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியையும் சீனா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. உயர் நிலை திறப்புப் பணியை முன்னேற்றும் நம்பிக்கையை சீனா வெளிகாட்டியது என்றும் அவர் தெரிவித்தார்.