சீனாவின் எண்ணியல் வர்த்தகத் துறையின் புதிய சாதனை
2023-11-23 19:13:16

2வது உலக எண்ணியல் வர்த்தகப் பொருட்காட்சி நவம்பர் 23ஆம் நாள் துவங்கியது. 2022ஆம் ஆண்டு சீனாவின் எண்ணியல் வர்த்தக வளர்ச்சிக்கான அறிக்கை இத்துவக்க விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சீனாவின் எண்ணியல் வர்த்தக மொத்த அளவு புதிய சாதனையை உருவாக்கியுள்ளது.

இவ்வறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு, சீனாவில் எண்ணியல் வழிமுறையின் மூலம் வழங்கப்படக்கூடிய சேவைக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்பு 37 ஆயிரத்து 271 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 3.4 விழுக்காடு அதிகமாகும். மேலும், உலகளவில் சீன எண்ணியல் வர்த்தகத்தின் போட்டி ஆற்றல் இடைவிடாமல் உயர்ந்து வருகிறது. இத்துறையில் முன்னேறிய தொழில் நிறுவனங்கள் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகின்றன. 2022ஆம் ஆண்டு வரை, சீனாவில் 100 கோடி அமெரிக்க டாலர் சந்தை மதிப்புள்ள எண்ணியல் வர்த்தக தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 200ஐ எட்டியுள்ளது.