© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் பிரதேசத் திறப்புப் பிரிவின் தலைவர் ஷு ஜியான்பிங் நவம்பர் 24ஆம் நாள் கூறுகையில், சீனா-ஐரோப்பா சரக்கு தொடர்வண்டிகள் மொத்தமாக 81 ஆயிரம் முறை இயங்கியுள்ளன. ஐரோப்பாவின் 25 நாடுகளைச் சேர்ந்த 217 நகரங்களுக்குச் செல்லும் இத்தொடர்வண்டிகள், ஆசிய-ஐரோப்பிய சர்வதேசப் போக்குவரத்தின் புதிய கட்டமைப்பை உருவாக்கி, நெடுகிலுள்ள நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான புதிய மேடையைக் கட்டியமைத்து, சர்வதேச தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலியின் நிலைப்புத் தன்மையை உத்தரவாதம் செய்துள்ளன என்றார்.
மேலும், எதிர்காலத்தில், சீனா-ஐரோப்பா சரக்கு தொடர்வண்டியின் உயர் பயனுள்ள போக்குவரத்து அமைப்புமுறை, பாதுகாப்பு மேலாண்மை அமைப்புமுறை, பல வழி அமைப்புமுறை, புத்தாக்க வளர்ச்சி அமைப்புமுறை ஆகியவை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.