காலநிலை செயல்திட்ட உச்சிமாநாட்டில் சீனத் துணைத் தலைமை அமைச்சர் பங்கேற்பு
2023-11-24 17:18:54

காலநிலை மாற்றத்தை ஆக்கப்பூர்வமாக கையாளவும், சீன-ஐக்கிய அரபு அமீரக நட்புறவை வலுப்படுத்தவும் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியும் துணைத் தலைமை அமைச்சருமான டிங் சுய்சியாங் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று, நவம்பர் 30 முதல் டிசம்பர் 2ஆம் நாள் வரை அந்நாட்டில் நடைபெற உள்ள ஐ.நா. காலநிலை செயல்திட்ட உச்சிமாநாட்டில் பங்கெடுக்க உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் நவம்பர் 24ஆம் நாள் தெரிவித்தார்.

நடப்பு உச்சிமாநாடு மீதான சீனாவின் எதிர்பார்ப்பு பற்றி அவர் கூறுகையில், காலநிலை மாற்றத்துக்கான பொது ஒப்பந்த முறைமையின் விதிமுறை, கோட்பாடு மற்றும் இலக்கைப் பின்பற்றி, வளரும் நாடுகள் எதிர்நோக்கும் இன்னல்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு தரப்புகளை சீனா முன்னேற்றுவதோடு, பாரிஸ் உடன்படிக்கையின் முழுமையான மற்றும் பயனுள்ள நடைமுறையாக்கத்தையும் முன்னெடுத்துச் செல்லும் என்று குறிப்பிட்டார்.