ராணுவ நடவடிக்கைகளை மீட்டுள்ள வடகொரியா
2023-11-24 14:51:28

வடகொரியா அண்மையில் உளவு செயற்கைக்கோளை ஏவியது. அதனையடுத்து வடகொரியாவுடன் எட்டப்பட்ட பன் முன் ஜோம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ராணுவத் துறை உடன்படிக்கையின்  சில அம்சங்களிலிருந்து விலகுவதாக தென்கொரியா அறிவித்தது. இந்நிலையில்,  இவ்வுடன்படிக்கையைப் பின்பற்றி நிறுத்தியுள்ள எல்லா ராணுவ நடவடிக்கைகளையும் வடகொரியா மீட்கும் என்று வடகொரியா 23ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சொந்தப் பாதுகாப்பின் காரணமாகவே பாதுகாப்பு உளவுச் செயற்கைக் கோளை ஏவியதாகத் தெரிவித்துள்ள வடகொரியா, தங்கள் நாட்டின்  அரசுரிமையைச் சட்டப்பூர்வமாகவும் நேர்மையாகவும் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.