ரஷியாவுடனான எல்லை போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதித்துள்ள பின்லாந்து
2023-11-24 10:34:38

ரஷியாவின் எல்லையில் உள்ள குசாமோ, சல்லா முதலிய கிழக்கு எல்லைக் நுழைவாயில்களை இந்த மாதம் 24ஆம் நாள் 0:00 மணி முதல் மூட முடிவு செய்துள்ளதாகவும், கிழக்கு எல்லையை கடந்து செல்ல ராஜயோசெபி நுழைவாயில் ஒன்று மட்டும் திறந்திருக்கும் என்றும் பின்லாந்து அரசு 22 ஆம் நாள் அறிவித்தது. இம்முடிவு,  இந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் நாள் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்டு துவக்கம் முதல், விசாக்கள் இன்றி சுமார் 700 மூன்றாம் நாட்டு குடிமக்கள் கிழக்கு எல்லை நுழைவாயில் வழியாக பின்லாந்தை அடைந்து,  புகலிடத்திற்கு விண்ணபித்துள்ளனர். இவர்களால் பிராந்தியத்தின் தேசியப் பாதுகாப்புக்கும் பொது ஒழுங்கிற்கும்  கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பின்லாந்து அரசு கருத்து தெரிவித்துள்ளது.