தமிழகம் மற்றும் கேரளாவில் தொரும் பலத்த மழை
2023-11-24 14:22:31

தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவர் 23ஆம் நாள் வியாழகிழமையன்று தெரிவித்தார்.

தொடர் மழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளதால், தமிழகத்தின் 5 மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பல மணி நேரம் பெய்த கனமழையால் பள்ளிகளுக்குப்  

புதன்கிழமை விடுமுறை விடப்பட்டது.

இதனிடையில், இந்த வாரத்தின் அடுத்தடுத்த நாட்களில், மேற்கூறிய பகுதிகளில் மேலும் மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.