2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இலங்கை பொதுத் தேர்தல்
2023-11-24 15:21:44

இலங்கை அரசுத் தலைவர் தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது என அந்நாட்டு அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே 24ஆம் நாள் புதன்கிழமையன்று தெரிவித்தார்.

அன்று, சில அவசரப் பிரச்சினைகள் குறித்த அறிக்கையை  நாடாளுமன்றக் கூட்டத்தில் வெளியிட்டபோது இதை தெரிவித்த விக்கிரமசிங்க, தேர்தலை ஒத்திவைப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்தார்.

மேலும், மாநில அளவிலான சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை 2025ஆம் ஆண்டு நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.