வான் புகைப்படக்கலைஞர் வாங் ருச்சுன்
2023-11-24 17:53:59

தினமும் காலை 8 மணிக்கு,  சீனாவின் ஹெபேய் மாநிலத்திலுள்ள ஷிஜியாசுவாங் நகரவாசி வாங் ருச்சுன் வானத்தை புகைப்படம் எடுத்து, அன்றைய காற்று தரத்தைப் பதிவு செய்வதை வழக்கமாக்க கொண்டுள்ளார்.

2014ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் தினமும் புகைப்படம் ஒன்றை எடுத்து வருகிறார். இது பத்தாவது ஆண்டு. இவர் பத்தாண்டுகளில் ஷிஜியாசுவாங்கின் வான் பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டுள்ளார். 

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவில் மிகவும் கடுமையாக மாசுபட்ட நகரங்களில் ஷிஜியாசுவாங் ஒன்றாகும். வானம் எப்போதும் சாம்பல் நிறமாக இருந்தது. மாசுபாடு மிகவும் மோசமாக இருந்த நாட்களில், எனக்கு தொண்டை வலி ஏற்படும் என்பதால் நான் வீட்டிலேயே தங்குவேன் என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாறு நாள்தோறும் புகைப்படங்களை எடுக்கும் போக்கில், வானில் ஏற்படும் மாற்றங்களை அவர் கண்டறிந்தார்.

சமீப ஆண்டுகளில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நாங்கள் எடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றுள்ளன என்று நினைக்கிறேன். 2019ஆம் ஆண்டிலிருந்து காற்றின் தரம் கணிசமாக மேம்படத் தொடங்கியது. 2023ஆம் ஆண்டின் ஜனவரி வரை, வானம் பிரகாசமாகவும் தெளிவாகவும் இருந்தது. கடந்த கால புகைப்படங்களில், வானம் சாம்பல் நிறமாக இருந்தது. இப்போது மென்மேலும் நீலமாக மாறி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி, ஷிஜியாசுவாங் நகரத்தின் காற்று தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டும் விளக்கப்படத்தை வாங் ருச்சுன் தயாரித்தார்.

2014ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பெரும்பாலான புகைப்படங்கள் மாசுபாட்டைக் காட்டுகின்றன. 2022ஆம் ஆண்டு வரை, இந்த புகைப்படங்களில் மாசுபாட்டக்காட்சி மிகக் குறைவாகக் காணப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டைத் தடுத்துக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைச் சீனா தொடங்கியது. பத்தாண்டு முயற்சியுடன் நீல வானத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. 2022ஆம் ஆண்டில், சீனாவின் முக்கிய நகரங்களில் சராசரி காற்று மாசுபாட்டின் அளவு 57 விழுக்காடு குறைந்தது.

காற்று தரம் சீராக மாறியுள்ளது. தற்போது நாங்கள் மாசுபட்ட சூழலில் வாழவில்லை. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

எங்கள் வாழும் தாயகத்தை இணக்கமான மற்றும் அழகான இடமாக மாற்ற நாங்கள் இணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.