காசா பொருட்கள் பற்றாகுறை நிலைமையின் தணிவு
2023-11-26 18:48:55

காசா பிரதேசத்தில் தற்காலிகமான போர் நிறுத்தம் 24ஆம் நாள் அமலுக்கு வந்தது. அதற்கு பிறகு, நிறைய மனித நேய உதவி பொருட்கள் அப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டன. இது, காசா பிரதேசத்தின் தென் பகுதியில் பொருட்கள் பற்றாகுறை நிலைமை தணிவுப்படுத்தியுள்ளது. இப்போர் நிறுத்தம் தொடர வேண்டும் என்று உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 7ஆம் நாள் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் நிகழ்ந்த பிறகு, காசா பிரதேசத்தை இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால், அங்கு பொருட்கள் பற்றாகுறை நிலவியதால் விலைவாசி பெருமளவில் அதிகரித்தது. தற்காலிகமான போர் நிறுத்தம் இரு நாட்கள் நடைமுறையில் இருந்த போதிலும், அங்கு பொருட்கள் பற்றாகுறை நிலைமை அடிப்படையில் மாறவில்லை என்பது குறிப்படத்தக்கது.