2023ஆம் ஆண்டு ஆசிய பொது விமானக் கண்காட்சி
2023-11-27 14:32:48

4 நாட்கள் நீடித்த 2023ஆம் ஆண்டு ஆசிய பொது விமானக் கண்காட்சி சீனாவின் ஜுஹா நகரில் 26ஆம் நாள் இனிமையாக நிறைவடைந்தது. இதில், பல விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, அற்புதமான விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.  அதோடு, இக்கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள 250க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. உற்பத்தி, ஆய்வு மற்றும் மேம்பாடு, சேவை முதலிய துறைகளில் சீனாவின் பொது விமானத் துறையின் சாதனைகளை முழுமையாக வெளிக்காட்டின.

68 ஆயிரம் பார்வையாளர் கலந்து கொண்ட இக்கண்காட்சியில். 239 விமானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இக்கண்காட்சியில் கையொப்பமிட்ட உடன்படிக்கைகளின் மொத்த மதிப்பு சுமார் 730 கோடி யுவானாகும்.