ஐ.நா பாதுகாப்பவையின் பங்கு தேவை:சீனா
2023-11-27 18:38:43

சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ, அண்மையில் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினைக்கான ஐ.நா பாதுகாப்பவையின் உயர்நிலை கூட்டத்துக்குத் தலைமை தாங்க வுள்ளார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 27ஆம் நாள் கூறுகையில், பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலில் அப்பாவி மக்களின் உயிரிழப்பும், மனித நேயப் பேரழிவும் ஏற்பட்டது, சர்வதேசச் சமூகத்தின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் முதன்மைக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஐ.நா பாதுகாப்பவை ஆக்கமுள்ள பங்கு ஆற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

ஐ.நா பாதுகாப்பவையின் மாதத்திற்கான தலைமை பதவி வகிக்கும் சீனா, இக்கூட்டம் மூலம், பல்வேறு தரப்புகளிடையில் பரிமாற்றத்தை அதிகரித்து, ஒருமித்த கருத்துகளை ஏற்படுத்தி, காசா பிரதேசத்திலுள்ள மனித நேய நெருக்கடியைத் தணிவு செய்து, இரு நாடுகள் என்ற வழிமுறையில் பாலஸ்தீன பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று சீனா விரும்புவதாகவும் வாங் வென்பின் தெரிவித்தார்.