அரசு சாரா தொழில் நிறுவனங்களின் நிதி ஆதரவுக்கு 25 முறைகள் அறிமுகம்
2023-11-27 18:12:47

சீன மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி 27ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, அரசு சாரா தொழில் நிறுவனங்களுக்கு நிதி சேவை வழங்குவதன் இலக்குகள் மற்றும் முக்கிய பணிகள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, அரசு சாரா பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கான 25 விவரமான முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சீன மக்கள் வங்கி உள்ளிட்ட 8 அரசு துறைகள் அண்மையில் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், அரசு சாரா தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவை வலுப்படுத்தும் வகையில், இந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் விகிதத்தை படிப்படியாக அதிகரிக்கும். மேலும், அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம், பசுமை மற்றும் குறைந்த கார்பன் போன்ற முக்கிய துறைகளுக்கும், அரசு சாரா நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கும், நிதி ஆதரவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.