© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் 10ஆவது கூட்டம் நவம்பர் 26ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று தென் கொரியாவின் பூசானில் நடைபெற்றது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இக்கூட்டத்தில் கூறுகையில், அண்டை நாடுகளுடன் அன்புடன் பழகுவது, அண்டை நாடுகளைக் கூட்டாளியாக கருதுதல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில், தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து, முத்தரப்பு சார் ஒத்துழைப்பை இயல்புக்கு மீட்டெடுக்கவும், சீரான மற்றும் நிலையான வளர்ச்சியைப் பராமரிக்கவும் சீனா முயற்சி மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பார்க் ஜின், ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் கமிகாவா யோகோ ஆகிய இருவரும், மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு முன்னேற்றத்தை ஆக்கப்பூர்வமாக பாராட்டினர். மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியத்துவமும் பெரும் உள்ளாற்றலும் கொண்டவை என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
தவிரவும், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்கள் சந்திப்புக்குரிய சூழ்நிலையை உருவாக்கவும் தொடர்புடைய ஏற்பாட்டுப் பணியைத் துரிதப்படுத்தவும், மூன்று தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.