சீன மக்களுக்கு விசா இல்லா கொள்கையை மேற்கொள்ளும் மலேசியா
2023-11-27 11:26:41

இந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல், சீன குடிமக்கள் 30 நாட்களுக்கு  விசா இல்லாமல் மலேசியாவில் பயணம் மேற்கொள்ளலாம் என்று  அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

அடுத்த ஆண்டு மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தூதரக உறவு நிறுவப்பட்டதன் 50ஆவது ஆண்டு நிறைவாகும். இதனைக் கொண்டாடும் வகையில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மலேசியாவின் சாதாரண கடவுச்சீட்டு கொண்டவர்களுக்கு விசா இல்லா கொள்கையைச் சீனா சோதனை முறையில் ஒரு சார்பாக மேற்கொள்ளும் என்ற சீனாவின் அறிவிப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.