சீனாவின் மென் பொருள் துறையின் வளர்ச்சி
2023-11-27 15:07:28

இவ்வாண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், சீனாவின் மென் பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்பச் சேவைத் துறையின் செயல்பாடு சீராக வளர்ந்து, மென் பொருள் துறையின் வருமானம் வேகமாக அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் அக்டோபர் வரை, மென் பொருள் துறையின் வருமானம் 9 இலட்சத்து 81 ஆயிரத்து 910 கோடி யுவானாகும்.

இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 13.7 விழுக்காடு அதிகமாகும். மென் பொருளின் மொத்த லாபம் இரட்டை இலக்கத்தில் அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் அக்டோபர் வரை, மென் பொருள் துறையின் மொத்த லாபம் 1 இலட்சத்து 14 ஆயிரத்து 260 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 13.8 விழுக்காடு அதிகமாகும்.