3-வது கட்டமாக 17 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
2023-11-27 14:36:13

3ஆவது கட்டமாக பிணைக்கைதிகளை 26ஆம் நாள் ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. அவர்களில் 13 பேர் இஸ்ரேலையும்,  3 பேர் தாய்லாந்தையும் ஒருவர் ரஷ்யாவையும் சேர்ந்தவர்கள் என்று இந்த இயக்கத்தைச் சேர்ந்த கசாங் படைப்பிரிவு அறிவித்துள்ளது. இதே போன்று, பாலஸ்தீனச் செய்தி நிறுவனம் 26ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, அன்றிரவு 39 பாலஸ்தீன சிறுவர்களை இஸ்ரேல் விடுவித்தது.