இந்தியாவின் கேரளாவில் மக்கள் நெரிசலில் மிதிபட்டு 4 பேர் உயிரிழப்பு
2023-11-27 15:24:28

தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் மிதிபட்டு 4 பேர் உயிரிழ்ந்தனர், 64க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே சுமார் 223 கி.மீ. தொலைவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், இந்த சம்பவம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.