© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
தென்மேற்கு சீனாவிலுள்ள யுன்னான் மாநிலத்தில் இரண்டு பிரபலமான சுற்றுலா காட்சிதலங்களான லீஜியாங், ஷாங்ரி-லா நகரங்களை இணைக்கும் ரயில் 26ஆம் நாள் ஞாயிற்றுகிழமையன்று முறையாக போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
லிஜியாங்-ஷாங்ரி-லா ரயில் இயக்கத்தின் மூலம், இரண்டு நகரங்களுக்கு இடையே 1 மணிநேரம் 18 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும். யுன்னான் மாநிலத்தின் தலைநகர் குன்மிங் நகரிலிருந்து ஷாங்ரி-லாவுக்குச் செல்ல 4 அரை மணி நேரம் அடைய முடியும்.
பீடபூமியில் உள்ள லீஜியாங்-ஷாங்ரி-லா ரயில் பாதை கட்டுமானம் 2014ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. கடந்த 9ஆண்டுகாலக் கட்டுமானத்தில் சுமார் 20ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பங்கெடுத்து, இந்த ரயில் பாதைக்காக 34 மேற்பாலங்களும் 20 சுரங்க வழிகளும் அமைக்கப்பட்டன.