சோமாலியாவின் வெள்ளப்பெருக்கில் 96 பேர் உயிரிழப்பு
2023-11-27 14:34:54

சோமாலியாவின் பேரிடர் மேலாண்மை ஆணையம் நவம்பர் 25ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக பெய்து கொண்டிருக்கின்ற மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குறைந்தது 96 பேர் உயிரிழந்தனர். சுமார் 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்ற தீவிர காலநிலையின் காரணமாக, சோமாலியாவில் பட்டினி நிலைமையிலுள்ள மக்கள் தொகை விகிதம் வரலாற்றில் முன் கண்டிராத அளவு உச்ச நிலையை எட்டியது. இவ்வாண்டின் டிசம்பரில் மழைக் காலம் முடிவுக்கு வரும் போது அந்நாட்டில் பசியால் வாடுபவர்களின் தொகை 43 லட்சத்தை எட்டக்கூடும் என்று உலக உணவுத் திட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது