ஷான்தொங் மாநிலத்தில் சிவப்பு முள்ளங்கியின் அமோக விளைச்சல்
2023-11-27 11:32:32

அண்மையில், சீனாவின் ஷான்தொங் மாநிலத்தின் தியான்பூ வட்டத்தில் சிவப்பு முள்ளங்கிகள் அமோகமாக விளைந்துள்ளன.  உள்ளூர் விவசாயிகள் சுறுசுறுப்பாக வேலை செய்து அவற்றை அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர்.  கடந்த சில ஆண்டுகளாக, சிவப்பு முள்ளங்கித் தொழில் அங்கே பெரிதும் வளர்க்கப்பட்டு வருகின்றது. சீனாவின் சிவப்பு முள்ளங்கியைப் பயிரிடுதல் மற்றும் பதனிடுதலுக்கான முக்கிய பகுதியாக இவ்வட்டம் விளங்கி வருகின்றது. உங்கு விளைவிக்கப்படும் சிவப்பு முள்ளங்கிகளில் 60 விழுக்காட்டுக்கு மேலானவை ஜப்பான், தென் கொரியா மற்றும் தென்கிழக்காசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.