காசா பிரதேசத்தில் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு
2023-11-27 20:08:04

ஐ.நாவின் அண்மை கிழக்கு பாலஸ்தீன அகதி உதவி மற்றும் ஆக்கப்பணியகம் அண்மையில் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தது.

காசா பிரதேசம் உணவுப் பஞ்சம் எதிர்கொண்டுள்ளது. காசா பிரதேசத்துக்குள் சென்ற எரி பொருள் குறைந்ததால், மருத்துவ மனைகள் இயங்க முடியவில்லை. இதனால், அங்கு நோய் பரவல் வாய்ப்பு அதிகரித்து வருகின்றது என்று தெரிவித்தது.

10 இலட்சத்துக்கு மேலானோர் அடைக்கலங்களில் தங்கியுள்ளனர். இதனால், காசா பிரதேசத்தில் நிரந்தர போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இப்பணியகம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.