யாங்சி ஆற்று பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சி குறித்து கூட்டம்
2023-11-27 18:40:34

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு நவம்பர் 27ஆம் நாள் நடத்திய கூட்டத்தில், யாங்சி ஆற்று பொருளாதார மண்டலத்தின் உயர்தர வளர்ச்சியை முன்னெடுக்கும் கொள்கை பற்றிய கருத்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தூதாண்மை பணி விதிகள் ஆகியவை பரிசீலனை செய்யப்பட்டன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

யாங்சி ஆற்று பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சி நெடுநோக்கு திட்டம் நடைமுறைக்கு வந்த பின், உயிரினச் சூழல், வளர்சி முறை, பிராந்திய ஒருங்கிணைப்பு முதலிய துறைகளில் மாபெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இம்மண்டலத்தின் வளர்ச்சி தரமாகவும் நிலையாகவும் மேம்பட்டு வருகிறது என்று இக்கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

உயர்தரமுள்ள உயிரினச் சூழலின் அடிப்படையில், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தை முக்கிய சக்தியாகக் கொண்டு, தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலியின் நவீனமயமாக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.