தொல்பொருட்களைத் திருப்பி கொடுக்க பிரிட்டனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது
2023-11-28 13:14:04

லாண்டானின் ரோசு சதுக்கத்தில் உள்ள பிரபலமான பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்டுள்ள 80இலட்சம் அரிய பொருட்களிலேயே, பெரும்பான்மை இதர நாடுகளிடமிருந்து வந்தன.

உள்ளூர்நேரப்படி 26ஆம் நாள் முதல் பிரிட்டனில் பயணம் மேற்கொண்ட கிரேக்க தலைமையமைச்சர், பி.பி.சி.க்குப் பேட்டி அளித்தபோது, பார்த்தீனான் கோயிலுக்குச் சொந்தமான பளிங்கு சிற்பங்களை கிரேக்கத்திடம் திருப்பி கொடுக்க பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிட்டதாவது, இந்தத் தொல்பொருட்கள் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து கேள்வி இல்லை. இவை கிரேக்கத்துக்குச் சொந்தமானவை, கிரேக்கத்தில் இருந்து திருடப்பட்டன.

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் சுமார் 23ஆயிரம் சீன தொல்பொருட்கள் உள்ளன. இந்தத் தொலிபொருட்கள், சட்டபூர்வமானது என்கிற குறிச்சொற்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பான்மை, சீன மக்கள் குடியரசை நிறுவப்பட்டதற்கு முந்தைய 100 ஆண்டுகாலத்தில் போர், திருட்டு, கருப்புச் சந்தை போன்ற வழிகளாக சீனாவிடமிருந்து பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கு வந்துள்ளன.

கொள்ளையடிக்கப்பட்ட தொல்பொருட்களைத் திருப்பி பெற, சீனா உள்ளிட்ட பல நாடுகள் விடாமுயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால், தொல்பொருட்கள் பாதுகாப்பு என்கிற சாக்கில் அவற்றை திருப்பி கொடுக்க பிரிட்டன் பலமுறை மறுத்துள்ளது. சட்டமியற்றல் மூலம் தொல்பொருட்களைத் திருப்பி கொடுக்க தடை விதிக்கும் விதம், 1963ஆம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்றம், பிரிட்டிஷ் பொருட்காட்சியக சட்டத்தை திருத்தியிருந்தது.

இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்ட சுமார் 2000அரியபொருட்கள் தொலைந்து விட்டதாகவும், சில பொருட்கள் இணையத்தில் வியாபாரம் செய்யப்பட்டதாகவும் வெளியிட்ட செய்தி, அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்தக் காரணமாக, பிரிட்டிஷ் அருங்காட்சியகம் நம்பகத்தன்மை நெருக்கடியில் சிக்கியுள்ளது. அது தொல்பொருட்களைப் பாதுகாக்கும் திறன் குறித்து ஐயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டன் தொல்பொருட்களைத் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

காலனி ஆட்சிகாலம் கடந்து விட்டு திரும்பாது. பல நாடுகளிடமிருந்து வரும் நியாயமான கோரிக்கைகளை பிரிட்டன் சரிவர நோக்கி, கொள்ளையடித்தல் வழியாக பெற்ற தொல்பொருட்களை வெகுவிரைவில் திருப்பி கொடுக்க வேண்டும் என கருதப்படுகிறது.