உலக கால நிலை மேலாண்மைக்கு சீனாவின் பங்கு
2023-11-28 18:39:55

சீனாவின் உதவியுடன் அரபு அமீரகத்தில் ஒளிவோல்ட்டா மின் நிலையம் முழுமையாகக் கட்டியமைக்கப்பட்டுள்ளது. ஐ.நா காலநிலை மாற்றம் பற்றிய கட்டுக்கோப்பு உடன்படிக்கையில் இணைந்த நாடுகளின் 28ஆவது மாநாட்டுக்குத் தலைமை தாங்கவுள்ள அரபு அமீரகத்துக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 28ஆம் நாள் கூறுகையில்,

உலகில் மிகப் பெரிய தூய்மை மின்னாற்றல் வலையமைப்பைக் கொண்ட சீனா முயற்சியுடன் இதர வளரும் நாடுகளுக்கு உதவி அளித்து வருகின்றது. அரபு அமீரகத்தைத் தவிர்த்து, பாகிஸ்தான், மொராக்கோ, கத்தார் முதலிய நாடுகளின் தூய்மை எரியாற்றல் திட்டப்பணிகளுக்கும் சீனா உதவி அளித்துள்ளது என்றார்.

ஐ.நாவின் காலநிலை மாற்றம் பற்றிய மாநாடு துபையில்நடைபெறவுள்ளது. அரபு அமீரகத்துக்கு ஆதரவு அளித்த சீனா, பல்வேறு நாடுகளின் தூய்மையான கரி குறைந்த வளர்ச்சிக்குப் பங்காற்றும் என்று அவர் கூறினார்.