முதல் சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி
2023-11-28 19:08:13

முதல் சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி 28ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கியது. 5 நாட்கள் நீடிக்கும் இப்பொருட்காட்சிக்கு, உலகத்தை இணைப்பது, எதிர்காலத்தை கூட்டாக உருவாக்குவது என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டுள்ள சீன மற்றும் அன்னியத் தொழில் நிறுவனங்கள், வினியோக சங்கிலி பற்றிய புதிய தொழில் நுட்பங்களையும் உற்பத்தி பொருட்களையும் புதிய சேவைகளையும் காட்சிப்படுத்துகின்றன.

வினியோகச் சங்கிலியை தலைப்பாகக் கொண்ட தேசிய நிலை பொருட்காட்சியான சீன சர்வதேச வினியோகச் சங்கிலி பொருட்காட்சி, சீனா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 515 தொழில் நிறுவனங்களை ஈர்த்துள்ளது.

இப்பொருட்காட்சியில் கலந்துகொண்டுள்ள தொழில் மற்றும் வணிகத் துறையினர்கள், பொருட்காட்சியின் தலைப்பு குறித்து விவாதம் செய்து, உலக தொழில் மற்றும் வினியோகச் சங்கிலி தொடர்பு பற்றிய பெய்ஜிங் முன்மொழிவை உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.