15585 கோடி யுவான் ஒப்பந்தத் தொகை எட்டியுள்ள பொருட்காட்சி
2023-11-28 10:07:57

2ஆவது உலக எண்ணியல் வர்த்தகப் பொருட்காட்சி நவம்பர் 27ஆம் நாள் சேஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் நிறைவடைந்தது. இப்பொருட்காட்சியில் 15585 கோடி யுவான் மதிப்புள்ள 32 திட்டப்பணிகள் காட்சியிடத்திலேயே கையெழுத்தாகின. இவற்றில், ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான், ஹங்கேரி, சிங்கப்பூர், சீனாவின் ஹாங்காங் முதலியவற்றைச் சேர்ந்த 11 அந்நிய முதலீட்டுத் திட்டப்பணிகள் உள்ளன. முதலீட்டுத் திட்டப்பணிகளின் எண்ணிக்கையில் இது 39.3 விழுக்காடு வகிக்கிறது. இவற்றுக்கான மொத்த முதலீட்டுத் தொகை 170 கோடி அமெரிக்க டாலராகும் என்று நிறைவுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1018 தொழில் நிறுவனங்கள் நேரடியாகவும் 367 நிறுவனங்கள் இணையம் வழியாகவும் நடப்புப் பொருட்காட்சியில் கலந்து கொண்டன. மேலும், எண்ணியல் தொழில் நுட்பம், எண்ணியல் சேவை, எண்ணியல் பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 100 புத்தாக்கத் தயாரிப்புகள் இப்பொருட்காட்சியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3ஆவது உலக எண்ணியல் வர்த்தகப் பொருட்காட்சி அடுத்த ஆண்டு செப்டம்பர் 25 முதல் 29ஆம் நாள் வரை நடைபெறும். எதிர்காலத்தில், இப்பொருட்காட்சி ஆண்டுதோறும் செப்டம்பரின் கடைசி வாரத்தில் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.