மேலும் 11 பணயக் கைதிகள் இஸ்ரேலுக்கு ஒப்படைப்பு
2023-11-28 14:47:29

இஸ்ரேல் இராணுவம் 27ஆம் நாள் இரவு வெளியிட்ட அறிக்கையின்படி, ஹமாஸ் இயக்கம் 4ஆவது கட்டமாக விடுவித்த 11 பணயக் கைதிகள் செஞ்சிலுவை மூலமாக இஸ்ரேலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, இஸ்ரேல் 28ஆம் நாள் விடியற்காலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 33 பாலஸ்தீனர்களை விடுவித்தது. தற்போது ஜோர்டான் ஆற்றின் மேற்குக் கரை பகுதியிலுள்ள ஓவர் சிறையிலிருந்து அவர்கள் பேருந்தில் வெளியேறினர். அவர்களில், 18 வயதுக்கு குறைவானவர்கள் 30பேர், பெண்கள் 3 பேர் என்று பாலஸ்தீன செய்தி நிறுவனம் 28ஆம் நாள் செய்தி வெளியிட்டது.