சீன-ஜப்பான்-தென்கொரிய நாடுகளின் மீண்டும் ஒத்துழைப்பு
2023-11-28 15:35:35

சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் 10ஆவது கூட்டம் 26ஆம் நாள் தென்கொரியாவின் ஃபூசானில் நடைபெற்றது. இக்கூட்டம் அடுத்த கட்டத்தில் மூன்று நாடுகளின் தலைவர்களின் சந்திப்புக்கு நிபந்தனைகளையும் சூழ்நிலையையும் உருவாக்கியது என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.

அண்டை நாடுகளான சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய மூன்று நாடுகள், புவியியல் மற்றும் பண்பாடு ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர அந்த மூன்று நாடுகளுக்குமிடையே ஒன்றை ஒன்று சார்ந்திருந்தல், ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுதல் போன்ற உறவுகள் நிலவுகின்றன.

இக்கூட்டத்தில் மூன்று நாடுகளின் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து 5 முன்மொழிவுகளைச் சீனா முன்வைத்தது. சீன-ஜப்பான்-தென்கொரிய தாராள வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை விரைவில் துவங்க வேண்டும். பெருந்தாவு, பிளாக்செயின் செயற்கை நுண்ணறிவு முதலிய முன்னேறிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். மக்களுக்கிடையே தொடர்பு மற்றும் பண்பாட்டு அளவை விரிவாக்க வேண்டும். முதியவர்கள் எண்ணிக்கை பிரச்சினையைச் சமாளிப்பது உள்ளிட்ட துறைகளில் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும். சுற்றியுள்ள நாடுகளுடன் "சீனா-ஜப்பான்-கொரியா + எக்ஸ்" ஒத்துழைப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். மேற்கூறிய 5 முன்மொவுகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம், மனிதப் பரிமாற்றம், சமூகம், தொடரவல்ல வளர்ச்சி முதலிய துறைகளுடன் தொடர்புடையவை. சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவை இந்த துறைகளில் மிகவும் கவனம் செலுத்துகின்றன. பரந்த ஒத்துழைப்பு வாய்ப்புகள் உண்டு. இக்கூட்டத்தில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து நேர்மறையான பதில்களை தெரிவித்தன.

சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையே ஏற்பட்டுள்ள ஒத்துழைப்புச் சாதனைகள் எளிதல்ல.

சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையே வேறுபாடுகள் இருப்பது இயல்பு. ஒருவருக்கொருவர் சரியான புரிதலைப் பேணுவது முக்கியம். வேறுபாடுகள் ஒத்துழைப்பின் ஒட்டுமொத்த நிலைமைக்குத் தடையாக இருக்கக்கூடாது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.