சர்வதேசப் பொருளாதார மற்றும் வர்த்தக விதிகளை மீறிய அமெரிக்கா
2023-11-28 18:40:46

அமெரிக்கா பொருளாதார அடக்குமுறையை மேற்கொண்டது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், அமெரிக்கா, பலமுறை பாதுகாப்பு என்ற சாக்குப்போக்கில், சீனத் தொழில் நிறுவனங்கள், மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்வதைச் சீர்குலைத்துள்ளது. இது, பொருளாதார அடக்குமுறையாகும். பாதுகாப்பு அச்சுறுத்தல் குற்றச்சாட்டுக்குத் தக்க சான்றுகளைக் கேட்ட போது, அவற்றை அமெரிக்கா தெளிவுபடுத்தவில்லை. அமெரிக்கா, தேசியப் பாதுகாப்பின் கருத்தாக்கத்தைப் பொதுமைப்படுத்தும் செயல்களை சீனா எதிர்க்கிறது. இத்தகைய செயல்கள், சர்வதேசப் பொருளாதார மற்றும் வர்த்தக விதிகளைக் கடுமையாக மீறுவதுடன், உலகளாவிய தொழில் மற்றும் விநியோகச் சங்கிலியின் நிதானத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் இந்த செயல்கள் பலன் அளிக்காது என்று தெரிவித்தார்.