பாண்டா பாசி அமைதி மற்றும் நட்பு மன்றக் கூட்டம்
2023-11-28 20:00:48

சீனச் சர்வதேச நட்புத் தொடர்பு சம்மேளனமும், சீன ஊடகக் குழுமமும் கூட்டாக நடத்திய 2023ம் ஆண்டு பாண்டா பாசி அமைதி மற்றும் நட்பு மன்றக் கூட்டம் நவம்பர் 28ம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் டு ஜியாங் யன் நகரில் நடைபெற்றது. “நட்பார்ந்த தொடர்பு பகிரப்பட்ட அமைதி” என்ற தலைப்பிலான இக்கூட்டத்தில், அமெரிக்கா, இத்தாலி, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், தொடர்புடைய நிபுணர்கள், பிரதிநிதிகள் உட்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

சீன ஊடகக் குழுமத்தின் துணைத் தலைவர் ஷிங் போ அம்மையார் இக்கூட்டத்தில் உரைநிகழ்த்துகையில், பாண்டா பற்றிய சிறந்த கதைகள் மூலம், மானிடத் தொடர்பு மற்றும் நட்பை முன்னெடுத்து, பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்புக்குத் துணை புரிந்து, சர்வதேச பாண்டா பரவல் கூட்டணியை உருவாக்குவதற்கு சீன ஊடகக் குழுமம் தொடர்ந்து பங்காற்றும் என்று தெரிவித்தார்.