© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவில் சொந்தமாகவே ஆராய்ச்சி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட லூங்சன்3A6000 எனும் புதிய தலைமுறை மையச் செயலகம்(சி.பி.யூ) 28ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய மையச் செயலகத்தில் சொந்தமாக வடிவமைக்கப்பட்ட கட்டளை அமைப்பு மற்றும் கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த வெளிநாட்டின் தொழில்நுட்ப அங்கீகாரம் வழங்குவதில் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கணினியில் மிகவும் முக்கிய பகுதியாக சி.பி.யூ என பொதுவாக அழைக்கப்படும் மையச் செயலகம், மனித மூளை போலவே இயங்கி பல்வேறு பாகங்களுக்கு கட்டளையிடும்.