காசா பிரதேசத்துக்கான மனித நேய உதவி
2023-11-29 19:54:52

மனித நேய உதவி பொருட்களை ஏற்றிச்சென்ற 242 சரக்குந்துகள், ராஃபா நுழைவாயிலின் மூலம் காசா பிரதேசத்தைச் சென்றடைந்ததாக எகிப்தின் கைரோ செய்தி ஊடகம் 29ஆம் நாள் தெரிவித்தது. இவற்றைத் தவிர்த்து, டீசல் மற்றும் எரிவாயு ஏற்றிச்சென்ற 7 சரக்குந்துகளும் காசாவை அடைந்தன.

காசாவைச் சேர்ந்த 9 பேர் எகிப்தில் மருத்துவ சிகிச்சைக்காக அன்று ரஃபா நுழைவாயை அடைந்தனர்.