வளர்ந்த நாடுகள் மேலதிகமான பங்கு ஆற்ற வேண்டும்
2023-11-29 19:49:34

அண்மையில், ஐ.நா சுற்றுச்சூழல் திட்டப் பணியகம் 2023ஆம் ஆண்டு வெளியேற்ற பசுங்கூட வாயு அளவில் ஏற்றத்தாழ்வு பற்றிய அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின் படி, பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது குறித்து, பாரிஸ் உடன்படிக்கையிலுள்ள வாக்குறுதியை விட மேலதிகமான நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 29ஆம் நாள் கூறுகையில்,

உலக காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில், நாம் செய்த முயற்சி போதாது என்று இவ்வறிக்கை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. வளர்ந்த நாடுகள் பெருமளவில் பசுங்கூட வாயு வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். இதைத் தவிர்த்து, நிதி, தொழில் நுட்பம், ஆக்கப்பணி ஆகிய துறைகளில் வளரும் நாடுகளுக்கு உதவியளிக்க வேண்டும் என்றார்.

பொறுப்பு ஏற்கும் பெரிய நாடான சீனா, உலக காலநிலை மேலாண்மைக்கு முக்கியப் பங்காற்றி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.