© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஜப்பான் கடலோர காவல்படை வெளியிட்ட தகவல்களின்படி, ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த வி-22 ஆஸ்ப்ரே விமானம், அகோஷிமா மாநிலத்தின் கிழக்கு யாகுஷிமா தீவு அருகே கடலில் விழுந்து நொறுங்கியது. 6 பேருடன் சென்ற இவ்விமானத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது
இவ்விபத்திற்குக் காரணம் கண்டறியப்படுவதற்கு முன்பே, ஜப்பானிலுள்ள வி-22 ஆஸ்ப்ரே விமானங்களின் சேவையை நிறுத்த வேண்டும் என்று ஒகினாவா மாநிலத்தின் தலைவர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.