கஜகஸ்தானில் சீனத் துணைத் தலைமை அமைச்சர் டி சுய்சியாங் பயணம்
2023-11-30 16:10:32


நவம்பர் 26, 27 ஆகிய நாட்களில், சீனத் துணை தலைமை அமைச்சர் டிங் சுய்சியாங் கஜகஸ்தானில் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் அரசுத் தலைவர் மற்றும் தலைமை அமைச்சருடன் தனித்தனியாக சந்தித்தார்.

27ஆம் நாளன்று கசகஸ்தானின் முதல் துணைத் தலைமை அமைச்சர் ரோமன் ஸ்க்லியருடன் இணைந்து டிங் சுய்சியாங் பேச்சுவார்த்தை நடத்தி, சீன-கசகஸ்தான் ஒத்துழைப்புக் குழுவின் 11ஆவது கூட்டத்துக்கு கூட்டாகத் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்புகளில் படைக்கப்பட்ட முன்னேற்றங்கள் விரிவாக பாராட்டப்பட்டன. எரியாற்றல், பொருளாதார வர்த்தகம், நிதி, போக்குவரத்து, அறிவியல் தொழில்நுட்பம், மக்கள் தொடர்பு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டதோடு,  அடுத்த கட்டத்தில் முக்கிய ஒத்துழைப்புகள் குறித்து முழுமையாக கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.