துர்க்மேனிஸ்தானில் சீனத் துணைத் தலைமையமைச்சர் டிங் சுவேசியாங் பயணம்
2023-11-30 21:58:30

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான டிங் சுவேசியாங் நவம்பர் 28, 29 ஆகிய நாட்களில், துர்க்மேனிஸ்தானில் பயணம் மேற்கொண்டார். அப்போது, அந்நாட்டின் அரசுத் தலைவர் செர்டார் பெர்டிமுஹமெடோவுடன் அவர் சந்திப்பு நடத்தி, அந்நாட்டின் துணைத் தலைமையமைச்சரும், வெளியுறவு அமைச்சருமான மெரிடோவுடன் இணைந்து, சீன-துர்க்மேனிஸ்தான் ஒத்துழைப்புக் கமிட்டியின் 6வது கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கினார்.

டிங் சுவேசியாங் கூறுகையில், சீன-துர்க்மேனிஸ்தான் உறவை, பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவாக உயர்த்துள்ளதாக இரு நாட்டு அரசுத் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். துர்க்மேனிஸ்தானுடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்தக் கருத்துகளைச் செயல்படுத்தி, சீன-துர்க்மேனிஸ்தான் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்துக்கு புதிய இயக்க ஆற்றலை ஊட்ட சீனா விரும்புகிறது என்றார்.

செர்டார் பெர்டிமுஹமெடோவ் கூறுகையில், சீனாவுடன் நெடுநோக்கு தொடர்புகளை வலுப்படுத்தி, பல்வேறு துறைகளில் பயன்தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் செழுமையான வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.