காசாவில் மீண்டும் தொடங்கிய போர்
2023-12-01 15:46:43

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் போர் நிறுத்தம் உள்ளூர்நேரப்படி டிசம்பர் முதல் நாள் காலை 7மணிக்கு முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து காசாப் பகுதியில் ஹமாஸுக்கு எதிரான தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலுக்குச் சொந்தமான உரிமை பிரதேசம் அன்று காசாப் பகுதியிலிருந்து வந்த ராக்கெட்டுக் குண்டுகளால் தாக்குத்தலுக்குள்ளானதாகவும், அதனையடுத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் காசாவிலுள்ள ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.