ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தில் இணைந்த ஜோர்டான்
2023-12-01 16:56:28

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தைக் கூட்டாக முன்னேற்றுவது குறித்து சீனாவுக்கும் ஜோர்டானுக்குமிடையிலான புரிந்துணர்வு குறிப்பாணை கையொழுத்தாகியுள்ளது. ஜோர்டானுக்கான சீனத் தூதர் சென் சுவாண்டோங், ஜோர்டானின் திட்ட மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஜைனா டுகன் ஆகியோர் 29ஆம் நாள் இரு அரசுகளின் சார்பாக, ஜோர்டானின் தலைநகரான அம்மானில் இக்குறிப்பாணையில் கையொட்டமிட்டனர்.

இப்புரிந்துணர்வு குறிப்பாணையானது, இரு நாடுகளின் கொள்கை மற்றும் தொடர்பு, வசதிகளின் இணைப்பு, தடையில்லாத வர்த்தகம், மூலதன நிதி மற்றும் மக்கள் இதயங்களின் தொடர்பை மேம்படுத்தும் என்று சென் சுவாண்டோங் தெரிவித்தார்.