யாங்சீ ஆற்றுக்கழிமுக வளர்ச்சியின் முக்கியதுவம்
2023-12-01 16:22:35

யாங்சீ ஆற்றுக்கழிமுகத்தின் ஒருமைப்பாட்டு வளர்ச்சியை முன்னேற்றுவது பற்றிய கூட்டத்துக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 30ஆம் நாள் முற்பகல் தலைமை தாங்கினார்.

யாங்சீ ஆற்றுக்கழிமுகத்தின் ஒருமைப்பாட்டு வளர்ச்சியை முன்னேற்றும் பணியை ஆழமாக்கி, புத்தாக்க திறன், தொழில் போட்டியாற்றல், வளர்ச்சி நிலை ஆகியவற்றை உயர்த்துவது, சீனாவின் புதிய வளர்ச்சி அமைப்பு முறையை கட்டியமைப்பதற்கும், உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் முக்கியதுவம் வாய்ந்தது என்று இக்கூட்டத்தில் அவர் வலியுறுத்தினார்.

சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங்கும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அலுவலகத்தின் தலைவர் சே ச்சீவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.