காசா பிரதேசத்தில் ராணுவ நடவடிக்கையை மீண்டும் துவங்கிய இஸ்ரேல்
2023-12-01 20:11:27

பாலஸ்தீன அரசு செய்தி நிறுவனம் டிசம்பர் முதல் நாள் வெளியிட்ட செய்தியின் படி, காசா பிரதேசத்திலுள்ள ஹமாஸ் இயக்கத்தின் மீதான ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் அன்றுமீண்டும் துவங்கியது. இதில் காசா பிரதேசத்தில் 32 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர்.

காசா பிரதேசத்தின் மீதான இந்த ராணுவ நடவடிக்கை  குறித்து ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ் டிசம்பர் முதல் நாள் வருத்தம் தெரிவித்தார்.