சீனாவின் கிழக்கு கடற்பரப்பில் ஆய்வு பயணம் மேற்கொண்ட ஷி ச்சின்பிங்
2023-12-01 19:09:28

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், நவம்பர் 29ஆம் நாள் சீனாவின் கிழக்கு கடலுக்கான ஆயுத காவற்துறை தலைமையகத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டின் எழுச்சியை நடைமுறைப்படுத்தி, கடற்காவற்துறை ஆக்கப்பணியை முன்னேற்றி, கடற்பகுதியில் சட்ட அமலாக்கத் திறனை உயர்த்தி, சீனாவின் அரசுரிமை மற்றும் கடற்பகுதியின் நலனைப் பேணிக்காக்க வேண்டும் என்றார்.

சட்டத்தின்படி, கடல் பகுதியில் குற்றங்களை கடுமையாக தடுத்து, சீன கடல் பொருளாதார வளர்ச்சியைப் பேணிக்காக வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.