உலகத் தொழிற்துறை மற்றும் விநியோகச் சங்கிலியைப் பேணிக்காக்கும் சீனா
2023-12-01 20:14:09

முதலாவது சீனச் சர்வதேச விநியோகச் சங்கிலி பொருட்காட்சி நவம்பர் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. உலகத்தின் முதலாவது விநியோகச் சங்கிலி என்ற கருப்பொருள் கொண்ட தேசிய நிலை பொருட்காட்சி இதுவாகும். இப்பொருட்காட்சியில், நுண்ணறிவு வாகனங்கள், பசுமை வேளாண்மை, தூய்மையான எரியாற்றல், எண்ணியல் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், ஆரோக்கியமான வாழ்க்கை ஆகிய 5 விநியோக சங்கிலிகளுக்கான காட்சி அரங்குகள் அமைக்கப்படுள்ளன. 55 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 515 தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் பங்கெடுத்துள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டன. அரசியல் காரணமாக, சந்தையின் விதிமுறையை மாற்றக்கூடாது. உலகத் தொழிற்துறை சங்கிலியில் சீனா தவிர்க்கப்பட முடியாத சக்தியாக உள்ளது என்று இது வெளிப்படுத்தியுள்ளது.

உலகத் தொழிற்துறை சங்கிலி பாதிக்கப்பட்ட பின்னணியில், நடப்புப் பொருட்காட்சி நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தது. உலகத் தொழிற்துறை மற்றும் விநியோகச் சங்கிலியைப் பேணிக்காப்பது பற்றிய சீனாவின் கருத்து, உலகத் தொழில் மற்றும் வணிக துறையில் பலவித கருத்து ஒற்றுமை ஏற்பட்டது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிக்கலான சர்வதேச சூழ்நிலையில், சீனப் பொருளாதாரத்தின் உறுதித் தன்மை, வெளிநாட்டுத் திறப்புக்கான விரிவாக்கம், வணிகச் சூழ்நிலையை மேம்படுத்தும் உறுதியான மனபாங்கு ஆகியவை, சீனாவிலுள்ள வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கியுள்ளன.