வெளிநாட்டுத் தொழில் மற்றும் வணிக துறையினர்களின் முதலீட்டுக்கான சீனா வரவேற்பு
2023-12-01 19:05:33

2023 மற்றும் 2024ஆம் ஆண்டு சீனாவின் பொருளாதார அதிகரிப்புக்கான எதிர்பார்ப்பு பற்றிய அறிக்கை ஒன்றை ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு அண்மையில் வெளியிட்டது. இவ்வாண்டு சீனப் பொருளாதார வளர்ச்சி 5.2 விழுக்காடு அதிகரித்ததோடு, ஆசிய-பசிபிக் பிரதேசம் மற்றும் உலகப் பொருளாதார அதிகரிப்பின் முக்கிய இயக்காற்றலாக விளங்கும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் டிசம்பர் முதல் நாள் கூறுகையில், இவ்வாண்டு சீனப் பொருளாதாரம் மீட்சியடைந்து வருகிறது. உயர்தர வளர்ச்சி பயனுள்ள முறையில் முன்னேற்றப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் மற்றும் வணிக துறையினர்கள் சீனாவில் தொடர்ந்து முதலீடு செய்வது வரவேற்கப்படுகிறது என்றார்.