உலகின் இரண்டாவது பெரிய பத்திர சந்தையாக மாறியுள்ள சீனா
2023-12-01 15:08:18

சீனா உலகின் இரண்டாவது பெரிய பத்திர சந்தையாக மாறியுள்ளது. சீனாவின் ஏ-பங்குகள் மற்றும் அரசு கடன் பத்திரம் என இரண்டும், MSCI, ப்ளூம்பெர்க் பார்க்லேஸ், ஜேபி மோர்கன் சேஸ் போன்ற முக்கிய உலகளாவிய குறியீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக சீன மக்கள் வங்கி தலைவர் பான் கோங்ஷெங் அண்மையில் தெரிவித்தார்.

பான் கோங்ஷெங் மேலும் கூறுகையில், தற்போது, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் 3 இலட்சத்து 30 ஆயிரம் கோடி யுவான் மதிப்பிலான சீன அரசின் கடன்பத்திரங்களை வைத்திருக்கின்றன.  கடந்த சில ஆண்டுகளாக இதன் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் சுமார் 30 விழுக்காடாக உள்ளது என்றார். மேலும்,  சர்வதேச முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு இணங்க, சீன மக்கள் வங்கி, சீனாவின் நிதிச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதற்குரிய வசதிகளையும்  வழங்கியுள்ளது என்றார்.