விவசாய நிலப் பாதுகாப்பு மற்றும் உவர்நிலத்தின் விரிவான பயன்பாடு குறித்த ஷிச்சின்பிங்கின் கட்டுரை
2023-12-01 15:20:58

விவசாய நிலப் பாதுகாப்பு மற்றும் உவர்நிலத்தின் விரிவான பயன்பாடு குறித்த கட்டுரையைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் கட்டுரை டிசம்பர் முதல் நாள் வெளியானது.

சீனாவின் ஜியூ ஷி எனும் இதழில் வெளிவந்துள்ள இக்கட்டுரையில், விவசாய நிலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒட்டுமொத்த வழிகாட்டல்கள் மற்றும் முக்கிய நடைமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

12கோடி ஹெக்டேர் பரப்பிலான விவசாய நிலம் என்னும் சிவப்புக் கோடு ஒருபோதும் தாண்டப்பட கூடாது என்பதைச் செயல்படுத்துவதில் பல்வேறு நிலை அரசாங்கங்கள் செயல்பட வேண்டும். விளைநிலத் தரத்தின் மேம்பாட்டுக்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். சாகுபடி செய்யும் விவசாயிகளின் உற்சாகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

தவிர, உவர்நிலத்தின் விரிவானப் பயன்பாடு குறித்தும் இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.