காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் பொது ஒப்பந்த மாநாடு
2023-12-01 12:32:39

காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் கட்டுக்கோப்பு பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தரப்புகளுக்கான 28 ஆவது மாநாடு 30ஆம் நாள்  ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் துவங்கியது.

பாரிஸ் ஒப்பந்தத்தின் முதல் உலகளாவிய மதிப்பீட்டை 2 வாரங்கள் நீடிக்கும் இம்மாநாடு நிறைவு செய்யும். பாரிஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம், ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைவதில் உள்ள ஒட்டுமொத்த இடைவெளி ஆகியவை மதிப்பீடு செய்யப்படுகின்றன. அனைத்துத் தரப்புகளும் மேம்பாடு மற்றும் புத்தாக்கத்தைத் துரிதப்படுத்தவும், ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இது வாய்ப்புகளை வழங்குவதாக கருதப்படுகின்றது.